தமி
LOLC ஃபினான்ஸ் பராமரித்தல் முகாமைத்துவப் பிரிவானது (Fleet Management), தனிநபர் முதல் பெறுநிறுவனங்கள் வரையிலுமான அனைவருக்கும் ஏற்றவாறான சந்தையில் விசாலமான பரப்பில் எமது வாடிக்கையாளர்களுக்கு பிரயாணத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அவர்களின் சொந்த மோட்டார் வாகனங்களை முறையாக பராமரிக்கும் சுமையினை குறைப்பதற்காக தொந்தரவுகளற்ற செலவுச் சிக்கனம் வாய்ந்த தீர்வுகளை வழங்குகின்றது. இப்பிரிவினால் வழங்கப்படும் இச்சேவையானது, வாகன பராமரிப்பினை அதன் சொந்த மோட்டார் பழுதுபார்த்தல் வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் குறுகியகால வாடகைக்கு வழங்கல் முதல் நீண்ட கால வாடகைக்கு வழங்கல் வரையான தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. தன்னிகரற்ற பராமரித்தல் முகாமைத்துவச் சேவைகளை வழங்கி வருவதற்கு மேலதிகமாக, கம்பனியானது அனைத்து சந்தைப் பரிவுகளுக்கும் சேவையை வழங்கத்தக்கதான கார் வாடகைக்கு வழங்கல் (Rent-A-Car) சேவையினையும் வழங்கிவரும் உறுதியான சேவை நிலைப்பாட்டினையும் கொண்டுள்ளது.